ஷக்தி N.சிதம்பரம் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகிறது “ ஜெயிக்கிறகுதிரை

ஷக்தி N.சிதம்பரம் இயக்கத்தில்

                                காமெடி படமாக உருவாகிறது  

                                      “ ஜெயிக்கிறகுதிரை “

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ ஜெயிக்கிறகுதிரை “

இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  ஆஞ்சி.                                                                                                               

இசை   –  கே.ஆர்.கவின்சிவா                                                                                               

எடிட்டிங்   –  ரஞ்சித்குமார்                                                                                                             

கலை  –  மணிகார்த்திக்                                                                                                                                                                                                  ஸ்டன்ட்  –  தளபதிதினேஷ்                                                                                                           

நடனம்   –  கூல் ஜெயந்த்                                                                                                                        

மக்கள் தொடர்பு  – மௌனம்ரவி                                                                                                      

தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எம்.சேகர்                                                                                   

தயாரிப்பு நிர்வாகம்  –  லியாகத்                                                                                           

தயாரிப்பு  –  D.R.திரேஜா                                                                                                         

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  – ஷக்தி N.சிதம்பரம்                                                    

படம் பற்றி இயக்குனர் ஷக்தி N.சிதம்பரத்திடம் கேட்டோம்..                                                        

ஜெயிக்கிறவனை மட்டும் தான் இந்த உலகம் மதிக்கும். நீ நல்லவனா கெட்டவனா என்று பார்க்காது. நீ ஜெயிச்சவனா என்று தான் பார்க்கும். அப்படியான இந்த உலகில் ஜெயிக்க நாயகன் ஜீவன் எந்த வழியை தேர்ந்தெடுத்தான்  எப்படி வெற்றி பெற்றார் என்பதை காமெடியாகவும், வித்தியாசமாகவும், சென்டிமென்ட் கலந்து உருவாக்கி உள்ளோம். பொதுவாகவே எனது படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. இந்த படத்திலும் காமெடி இரண்டரை மணி நேரம் சிவகாசி சீனி வெடி போல பட பட வென இருக்கும். அனைவரும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படமாக உருவாக்கி இருக்கிறேன். படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் ஷக்தி N.சிதம்பரம்.